ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!
பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், "ஊழல்' என்ற சொல், ஒரு கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.
ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம்.
ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம்.
இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்” என்கிறோம்.
எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.