மனசே மனசே கலங்காதே!
`
நீ பட்ட / படும் / படவிருக்கும்
கஷ்டங்கள் யாவும் உன் இஷ்டங்களே!
`
நீ அழுத / அழாத / அழ வேண்டிய
வேதனைக்குரிய தருணங்கள் யாவும்
உன்னுள் மனதின் வலிமையே!
`
நீ கடந்த / கடக்கும் / கடக்கவிருக்கும்
பாதைகள் யாவும் இன்னமும் வேணும்
எனும் அனுபவங்களே!
`
நீ புரியாமல் / குழம்பி / புழம்பித்
தவியாய் தவிக்கும் விடையில்லாக் கேள்விகள் யாவும்
உன் விழிகளில் மிதக்கும் புனிதக் கண்ணீர்த் துளிகளே!
`
ஆம் நம் விழிகளில் மிதக்கும் கண்ணீர்த்துளிகள்
யாவும் மிகப் புனிதமானவையாகும்!
`
அதை ஒருபோதும் எக்காரியத்தின் நிமித்தமும்
உன் மனம் தளர்ந்து நொந்து சிறிதுபோலும்
கண்ணீரைக் கசிய விடாதே கீழே சிந்திவிடாதே!
`
இதை நீ முழுமையாய் உணர்ந்து
உன் மனதுருகிவிடாமல் திடமனதாய்
பெலன் கொண்டு நான் வாழ வேண்டும்
வாழ்ந்து சாதிக்க வேண்டும் என போராடு...
உன் முழு தன்னம்பிக்கையுடன் எதையும்
எதிர் கொண்டு முடியும் வரை உந்தன்
வாழ்கையோடு போராடு!
`
முயன்றால் அகிலமும் உனக்குத்தான்!
No comments:
Post a Comment