Saturday, July 31, 2010

New Tamil movies link collections

Aval pear tamilarasi

 http://www.megaupload.com/?d=RM24WF77

Paiya

 http://www.megaupload.com/?d=9CFPHOKH

Irumbu kottai murattu SINGAM

 http://www.megaupload.com/?d=XC3Z165B


Goa

http://www.megaupload.com/?d=KQM9VADM

Asal

http://www.megaupload.com/?d=WL89V0BV


VINNAI THANDI VARUVAYA

 http://www.megaupload.com/?d=3K9HEZ2M



Peranmai

 http://www.megaupload.com/?d=F9K82KVO


Eeram

 http://www.megaupload.com/?d=G0FGDD61


KANTHASAMY

http://www.megaupload.com/?d=OD1RN6LW

Rettaisuli

http://www.megaupload.com/?d=594X14DU


Angadi theru

 http://www.megaupload.com/?d=08Y3COG6



Kola kolaya munthirikka

http://www.megaupload.com/?d=9MP0L5XL


Aadhavan

 http://www.megaupload.com/?d=HA1TFM0A


Nanayam

http://www.megaupload.com/?d=9GVOSXH0


Katrathu kalavu

http://www.megaupload.com/?d=P39HC9KD

Thursday, July 29, 2010

எங்கே விழுந்திருக்கிறோம்?

அந்த இளைஞர்கள் இருவருக்கும் வேட்டையாடுவதில் அதிக விருப்பம். எனவே, அவர்கள் அடிக்கடிக் காட்டுக்குச் செல்வது வழக்கம்.

ஒருநாள், சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

விமான ஓட்டுனர் சொன்னார் : ''ஐயா, இரண்டு எருமைகளுடைய எடையையும் இந்த சிறிய விமானம் தாங்காது. வேண்டுமானால் ஒன்றை ஏற்றிக்கொள்ளலாம்'' என்றார்.

உடனே இளைஞர்கள், ''கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே!'' என்றனர்.

''ஓ! அப்படியா? அப்படியென்றால் சரி! இப்போது இரண்டு எருமைகளையும் ஏற்றலாம்.''

இளைஞர்கள், எருமைகளை விமானத்தில் ஏற்றினர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறிய விமானம் வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்து வேட்டைக்கார இளைஞர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்தனர். ஒருவன் கேட்டான் : ''இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?''

அடுத்தவன் பதில் சொன்னான் : ''போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்!''

இந்த வேடிக்கை கதை விளக்குகிற உண்மை என்ன?

அனுபவங்கள் நமக்குப் பாடமாக வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அடிக்கடி விழ வேண்டி இருக்கும்.

தவறு செய்த பக்தன் ஒருவன், தவறுக்குப் பரிகாரம் தேட கோயிலுக்குச் சென்றான்.

''கடவுளே, தப்பு செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடு'' என்று வேண்டினான். மன்னிப்பு கிடைத்தது. மன நிறைவுடன் திரும்பினான்.

அதன் பின்னர் அந்தத் தவறை அவன் செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே அவனுக்கும் பெருமை; ஆண்டவனுக்கும் பெருமை.

மன்னிக்கப்படுவது என்பது மறுபடியும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கவே!

ஆன்மிகத்தை தவறாகப் புரிந்து கொண்டால், விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும்.

தமாஷான ஓர் உதாரணம்...

''ஆண்டவன் நம்ம பாவங்களை மன்னிக்கணும்னா நாம என்ன செய்யணும்?''

''நாம முதல்ல பாவங்களைச் செய்யணும்!''
---------------------------------
தென்கச்சி கோ. சுவாமிநாதன்

Tuesday, July 20, 2010

கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் அப்படி என்ன தான் வேலை பார்ப்பீங்க?

கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் அப்படி என்ன தான் வேலை பார்ப்பீங்க?

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி
என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு
"Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியம்"னு
பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அ்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன்
குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.
அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட
மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க
வேண்டிய விசயம்னு"

Monday, July 19, 2010

Good morning




There are only two ways to live your life.
One is as though nothing is a miracle.
The other is as though everything is a miracle.

Albert Einstein
Good Morning

Saturday, July 17, 2010

Lines of Vali from the movie Kadhal virus

படம் : காதல் வைரஸ்
பாடல் : ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு?



ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு?
புதுசாய் இந்த பார்வை எதற்கு?
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்?

ம்ம் ... ம்ம் ... ம்ம் ... ம்ம் ... மவனே ...

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞன் என்று உன்னை ஆக்கியதோ

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
ம்ம் ... ம்ம் ... ம்ம் ... ம்ம் ...

பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம்-என இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்-என இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிகடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் உத்தம புத்திரன் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு?
புதுசாய் இந்த பார்வை எதற்கு?
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்?


செல் போன்கலை மறந்தவன் வேண்டும்
தொலைகாட்சியை துறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளி படையாய் இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சு கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வெச்சு கூப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞன் என்று உன்னை ஆக்கியதோ

நான் ரசித்து ரசித்து படித்தது....

Konjam perusa thaan irukkum….. aana worth reading !!!


பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக


என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்திடும்திடும்

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்கஉன் வாழ்க்கை உன் கையில்னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்கசெட்டில்ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னாஅழுத புள்ளைக்குதான் பால்னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம்இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சுஅப்புறம்.., இவனுக்கு எப்போனு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பானு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரிம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்னு சலிச்சுக்குவானுக.

அவங்களும்வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பான்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டுசரி என்னமோ பண்ணுங்க போங்கஅப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனாஎன்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்குசின்ன வீடுபாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும்,ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும்அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேருஎதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரிபெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனாலஆயிரத்தில் ஒருவன்மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்குன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலேன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆகஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமாதம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பான்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோஅப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு.நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கேன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள்மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு,சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்பஎன்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்குனு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பாமணல் கயிறுகிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gateஎல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசிலபெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, வேறே ஏதும் இருக்கா?

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியாசங்கீத ஸ்வரங்கள்னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறதுன்னு, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பலமௌனம் பேசியதேசூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதேன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!




--
Thanks to Mr. Murukesh (Nagapattinam).....




வாழ்க தமிழ்...!! வெல்க தமிழ்...!!!