நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
View Raw Image" src="http://i44.tinypic.com/28k7t69.jpg" width="348" height="38">
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. - அன்னை தெரஸா.

கண்களைத் திறந்து பார் அனைவரும் தெரிவார்கள். கண்களை மூடிப் பார். உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை தயங்கியவர் வென்றதில்லை!

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது. - பாரதியார்

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். - அப்துல்கலாம்.

ஓர் உண்மை: நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!

|
No comments:
Post a Comment