*உண்மையான நட்பு!*
`
நண்பர்கள் தன்
நண்பனுக்கோ அல்லது
தோழிக்கோ ஏதேனும் ஒரு
ஆபத்தெனில்...
அந்த ஆபத்தை நீக்க
தானே துயருற்றாலும்
தன் உயிரையே உதிர்த்தாவது
அவர்களை தன் மனதார
மகிழ்ச்சி பெறச்செய்வான்
அதிலே தானும் கொஞ்சம்
மகிழ்ச்சியுற்றும் கொள்வான்!
அவனே நன்மையான நண்பன்!
அவன் காண்பிக்கும் பாசம்...
அஃதுவே மிகப்புனிதமான நேசம்!
அன்புடன் கரம் பிடித்து
உறுதுணையாய் இருந்து
வாழ்கையின் இறுதிவரை
கூடவே நடக்கும்!
அவ்வாறே இப்புவியில்
அவனுக்கும் அவன் நட்பிற்கும்
ஈடு இணையேதுமில்லை!
மேலும் அவரவர்களுள்
பெருமிதம் கொள்ளும்
*உண்மையான நட்பு!*
No comments:
Post a Comment