அது ஒரு வியாழக்கிழமை, இரவு ஒன்பது மணி ...
''டேய் மச்சான், டீம் லீட் திட்டீடா,
''இன்னைக்குமாடா மாபிள்ள... ?
''ரெண்டு ரவுண்ட் ஏத்துனா தாண்டா, தூக்கம் வரும்,
''இன்னைக்கு வியாழக்கிழமை, நம்ம பூஜை வழக்கமா நாளைக்கு தான,
இவனுங்க கூட இன்னும் மூணு பேறு, ஒரே குடி,...
''இன்னைக்கு ஓனர் வேற வாராரு, குடிக்கிறதா இருந்த பார்ல போய் குடிங்கடா ,
இவன் தான் ரூம் மேனேஜர், இவனோட லட்சியம் அவனுக்கே தெரியாது, ஆனா இவன் பெரிய ரைட்டர், கவிதை, கதை எல்லாம் பயங்கரமா எழுதுவான்.
''மூணு மாசம் கழிச்சி ஓனர் வாராரு, குப்பைய எல்லாம் கூட்டுங்கடா
இவன் ஒரு டெபுட்டி மனேஜரு, ரொம்ப பொறுப்பு...
''உங்கள எல்லாம் எப்படியா கூட்டுறது ...
கொஞ்சம் சீனியருங்கிரதுனால இப்படி ஒரு மரியாதை,
இது வரைக்கும் மடங்காத பெட் சீட், அடங்காத ஆடியோ ஸ்பீகர்கள், யாருக்கோ ஓடும் டி.வி, ஓய்வே எடுக்காத மூணு நாலு லேப் டாப், சில பேன்ஸ், டியுப் லைட்ஸ், அண்ட யாருக்கோ டாரண்டில் எந்நேரமும் டவுன்லோட் ஆகும் சினிமா படங்கள். இது தான் ஒரு அழகான பேச்சலர் ரூம்.
சரி இருந்திட்டு போகட்டும். கொஞ்சம் நேரத்துல பூஜை தொடங்கியது, சிறிது நேரம் கழித்து, திடீரென்று யாரோ வீட்டின் கதவை தட்ட,
''டேய் மச்சான், ஓனர்டா,
வேகமாய் கையில் இருந்த பாட்டிலை எல்லாம் எடுத்து பெட் சீட்டுக்குள் மறைத்துக்கொண்டிருக்க, ஓனர் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தார். அவருக்கு வயது எழுபத்தி இரண்டு இருக்கும்.
''ஆமா நீங்க யாரு,
''தம்பி உள்ள வரலாமா, நான் தான் ஓனர்,
''ஓ ஓனர், வாங்க, வாங்க, மறந்தே போயிட்டேன்
நாளைக்கு டிக்கட் எடுக்க போறவனெல்லாம் ஒனராம், மனசுக்குள் புலம்பிக் கொண்டே அவன் பேச.
''என்னப்பா, எல்லாரும் நன்னா இருக்கேளா, அப்புறம் என்ன விஷயம், வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு, உங்க குருவ எங்க.
''அவருக்கு உடம்பு சரியில்ல, அந்த ரூம்ல தூங்கிட்டு இருக்காரு.
ஆனா அவன் பக்கத்து ரூமுல குடி போதையில குப்புற படுத்து புலம்பிக்கிட்டிருந்தான்.
சரி, அவன் யாரு, இவன் யாரு, இதுக்கு முன்னால நான் பார்த்தது இல்லையே.
ரொம்ப பரிதாபமாய் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
''இவன் தான் அவன், அவன் தான் இவன், அவனோட தம்பி இவன், அவன் இன்டர்வியு அட்டென்ட் பண்றதுக்காக வந்திருக்கான், இவன் நாளைக்கு போயிடுவான்....
எல்லாம் கேட்டு முடித்ததும் பரிதாபமாய் தலையாட்டி விட்டு அவர் வெளியே சென்றார், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பூஜை தொடங்கியது.
''மச்சான், I decided to participate in vijay TV super singer டா.
''சான்சே இல்லடா, கிரேட் ஐடியா.
மறுபடியும் கதவு தட்டும் ஓசை கேட்க, மீண்டும் வாசலில் ஓனர்,
''மேல டேங்கல தண்ணி இல்ல, சாயங்காலம், அந்த பையன்கிட்ட மோட்டர் போட சொன்னேன், அவன் மறந்திட்டான் போல இருக்கு,
அவர் மறந்து போய் அவன்கிட்டேயே கேட்க,
''அவன் இப்படி தான் மறந்திடுவான், இனிமே எது வேணாலும் என்கிட்டே சொல்லுங்க,
மறுபடியும் பரிதாபமாய் அவர் தலையாட்டி விட்டு போக, சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பூஜை தொடங்கியது.
'''எங்கப்பா என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சார், இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கேனா அவரு தான் காரணம், ஆனா இப்படி பொருப்பில்லாமா தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கேன் .....
திடீரென்று ஒருத்தன் வழக்கம் போல் அழுது புலம்ப,
''பீ கூல் மானேஜர், மச்சான் I decided to start a hoteldaa . But I also want to clear CAT and join IIM டா, but ....
''முடியல, நீ நிறுத்து
''இந்த காங்கிரஸ், டி.எம்.கே, ஜெயலலிதா, .... விஜயகாந்த் வின் பண்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு.
திடீரென்று ஒருத்தன் அரசியல் பேச, எல்லாரும் அவனை தூண்டி விட, ஒரு அரை மணி நேரம் போனதும்,
''அட பாவிங்களா, நான் எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் ...
''மச்சான், I want that leg piece டா,
''பெட்டர் மாக்ஸ் லைட்டே தான் வேணுமா, இந்தா பிடி.
திடீரென்று ஒரு போன் கால், ஒருத்தன் எடுத்து பேச,
''மச்சான், உன்னோட லீட், ஒரு டாக்குமன்ட் ஒன்னு ரெடி பண்ணனுமாம்.
உடனே இன்னொருத்தன் கடுப்பாகி
''குடுடா போன, அவள ரெண்டல ஒன்னு கேக்குறேன்.
''டேய் வேண்டாம், அவருகிட்ட போன குடுக்காத, டீம்ல இருக்குறே ஒரே பிகர் அவ தான். அவளும் ஓடிட போறா.
ஒரு வழியாக, அந்த போன் கால் முடிவுக்கு வந்தது.
கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் கதவு தட்டும் ஓசை, கடுப்பாகி ஒருத்தன் கதவை திறக்க, வாசலில் இந்த முறை ஒரு மானேஜர், அவர் உள்ளே வந்ததும், அவனிடம்,
''Sorry for the disturbance, hi man, we are going to have a meeting, please can you come with me to office now,
அவர் ஒரு அரை மணி நேரம் அவனிடம் புலம்பி விட்டு போனார்.
''நான் சூப்பரா ஒரு கவிதை எழுதிருக்கேன், படிங்கடா,
பரிதாபமாய் ஒருத்தன் சொல்ல,
''வாங்கடா எல்லோரும் படிக்கலாம்,
உடனே எல்லாரும் எழுந்து வந்து கோரசாய் அந்த கவிதையை வாசிக்க தொடங்கினார்கள். என்ன பண்றது இதுக்கு எல்லாம் கவலைபட்டா எப்படி கவிஞன் ஆகுறது.
.
No comments:
Post a Comment