Thursday, March 17, 2011

கவிதை

சண்டையில் தோன்றிய சந்திப்பு,
சமாதானத்தில் முடிந்த சண்டை ........

அதனால் பூத்த நட்பு

நட்பாய் நீ சொல்லிய கவிதை,

உன் கவிதையில் நான் கண்ட பாசம்

பாசமாய் நீ ஊட்டிய சோறு

அழகாய் சிரிக்கும் உன் முகம்

உன் முகம் பார்த்து கவலை மறக்கும் நான்,

நான் தவறிழிக்கையில்..

தெளிவாய் நீ கூறிய அறிவுரை
உன் அறிவுரை கேட்டு வெற்றி பெற்ற நான்,

பாசமாய் நீ கொட்டிய கொட்டு

உன் கொஞ்சல் வார்த்தை கேட்க
பாசாங்கை அழுத நான்!

இவை அனைத்தும் என்றும்

அழியா சுவடுகளாய் .......... என்றும்
பதிந்திருக்கும், என் மனதில் நீ .........
என்னை மறந்து போன பின்பும்.!

No comments:

Post a Comment