Saturday, March 26, 2011

வாழ்க இலவசம்

"டாஸ்மாக்' வருமானம் இல்லாமல், இனி எந்த கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்ற நிலைக்கு, நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு வந்து விட்டுள்ளனர், நம்மை ஆள்கிறவர்கள். காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றவர்கள், போதை வருமானத்தில் ஆட்சி நடத்தவில்லை என்பதை நாடறியும். அவர்கள் வழி வந்தவர்கள், அவர்களின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, இரண்டு தலைமுறைகளை நாசம் செய்து விட்டனர். இனி ஆட்சியில் அமரப்போகும் எந்த ஒரு முதல்வரும், ஒரே ஒரு இலவசத்தை மட்டும் மக்களுக்கு கொடுத்துவிட்டால் போதும்... அது, குடியால் உயிர் இழக்கும் ஒவ்வொரு, "குடிமகனுக்கும்' அந்திம கால ஈமச்சடங்கிற்கான ஒரு தொகையும் இலவசமாக கொடுத்து விட்டால், அவர்களின் ஆத்மா சாந்தி அடையும். வாழ்க இலவசம்.

No comments:

Post a Comment