Saturday, April 9, 2011

ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!


ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!


பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், "ஊழல்' என்ற சொல், ஒரு கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.


ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம்.



ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம்.

இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்” என்கிறோம்.


எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.

Friday, April 1, 2011

சளைக்காமல் போராடு
இன்னொரு பூமியை
எடுத்துக்கொள்ள அல்ல;
உனக்கான பூமியை
மிச்சப்படுத்தவாவது!

Thursday, March 31, 2011

ஒரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!

Wednesday, March 30, 2011

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல

இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

Monday, March 28, 2011

உறங்கும் விழிகள்
ரசிக்கின்றன
கனவுக் காட்சிகளை...!

இன்றைய உலகம்

இன்றைய உலகம்...

நேசிக்கும் பறவைக்கு
உணவு தருவோம்
கூண்டுக்குள் வைத்து...

பாதை என்பது தானே வகுப்பது

பாதை என்பது தானே வகுப்பது
-------------------------------------------

'வகுத்துக் கொடுப்பார்கள்
வழி'என்று தண்ணீர்
தவித்துக் கிடந்ததா?

ஓடி ஓடியே
ஓடை தனக்கோர்
உற்சாகப் பாதையை
உருவாக்கிக் கொண்டது!

ஓடினால் ஓடை
உட்கார்ந்தால் குட்டை

எது தேங்குகிறதோ
அது ஏங்குகிறது!