ஒரு குரங்கு தேன் சாப்பிட வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனல் தேன் கூட்டுக்குப் பக்கத்தில் போனல் என்ன நடக்கும் என்பதை அது கற்பனை செய்து பார்த்த போது பெரும் திகில் அடைந்தது.
ஆகவே தேனியிடம் இணக்கமாக நட்பு கொண்டு அதன் மூலம் தேனை சாப்பிட்டு விட வேண்டும் என்று அது எண்ணியது. குறங்குஅத்தனை நாவான்மை படைத்தது அல்ல. அதற்கு மற்றவர்களிடம் பழகவும் தெரியாது என்ற கெட்ட பெயர் இருப்பதை குரங்கும் அறியும்.
எனவே நீண்ட நேரம் யோசித்தது. பின் தேன் கூட்டருகே சென்று குரல் கொடுத்தது. ஒரு தேனி வந்து எட்டிப் பார்த்தது.
என்ன வேண்டும் என்று கேட்டது.
குரங்கு சொன்னது.
நிங்கள் எல்லாரும் எவ்வளவு இனிய தேனைச் சேகரிக்கிறீர்கள். ஆகவே உங்கள் சுபாவமும் குணமும் இனிமையானதாகத்தான் இருக்க முடியும் என்று நம்ம்புகிறேன். அப்படி இருக்க இந்த கொடூரமான கொடுக்கு உங்களுக்கு எப்படி ஏற்ப்பட்டது?
தேனீ கூறியது.
நீ சொல்வது உண்மைதான். நாங்கள் சுபாவத்திலே நல்லவர்கள். உழைப்பாளிகள். ஆகவே எங்கள் உழைப்புக்கு தக்க படி இனிப்பான தேனை நாங்கள் பெறுகிறோம். அதே போல எங்களை வன்முறையாக யாராவது சுரண்ட நினைத்தால் எங்களைத் துன் புறுத்தினால் அவர்களுக்குத் தக்க படி தண்டனை தர கொடுக்கும் உண்டாயிற்று
`
நீதி : நம் உழைப்பை ஏமாற்றி சுரண்டாமல் இருக்க நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் தேவையும்கூட...
`
இனிய காலை வணக்கம்...
No comments:
Post a Comment