பிரதர் கடை சீவல் ஐஸ்
பிரதர் கட சீவல் ஐசு என்பது பார் ஐஸ சீவல் மாதிரி சீவி அதுல சீனி பாகு கலந்த வித வித கலர் எஸ்சென்ச ஊத்தி நம்ம பிரதர் கே வி எஸ் ஸ்கூலுக்கு முன்னாடி குடுப்பாரு ....
1991: அன்று ஒரு நாள் காலை.. ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி, "அம்மா எனக்கு பத்து பைசா குடுங்க நா சீவல் ஐஸ் வாங்க போறேன்". டெய்லி பத்து பைசா உனக்கு கொடுத்தா மாச செலவுக்கு எங்க போறது, ஐஸ் சாப்ட்டா சளி புடிக்கும், ஐயா வைவாரு அப்டின்னு அம்மா சொன்னங்க... அன்று நான் அப்பிடியே ஸ்கூலுக்கு போயிட்டேன்....பிரதர் கட சீவல் ஐசு என்பது பார் ஐஸ சீவல் மாதிரி சீவி அதுல சீனி பாகு கலந்த வித வித கலர் எஸ்சென்ச ஊத்தி நம்ம பிரதர் கே வி எஸ் ஸ்கூலுக்கு முன்னாடி குடுப்பாரு ....
அன்னைக்கு சாயந்தரம் ஆச்சி வீட்டுக்கு போனேன், அங்க ஆச்சி என்னோட தலைய சீவி விட்டுகிட்டே சாப்ட்ரியாடானு கேட்டாங்க... நா ஆச்சி எனக்கு சீவல் ஐஸ் வேணும் எனக்கு பத்து பைசா குடுங்கன்னு அடம்புடுச்சேன்... அதுக்கு அவங்க "சளி புடிக்கும்டா தெருவோர ஐசெல்லாம் வாங்க கூடாது, சரி சரி இன்னைக்கு பத்து பைசா வாங்கிக்கோ இனிமேல் கேக்க கூடாது" அப்டின்னு சொன்னங்க....
நான் வேகமா ஓடிப்போய் சீவல் ஐஸ் வாங்கி சாப்ட்டேன்.... செம டேஸ்ட்டு .... அன்னைக்கு என் மனதுக்குள் ஓடிய விஷயம்...(நா பெரிய ஆளாகி நெறய காசு சம்பாதிச்சு நெறைய சீவல் ஐஸ் வாங்கி சாப்டுவேன்)
அன்று நான் நினைத்த படி பத்து பைசா அல்ல,, அஞ்சு ரூபா இல்ல... ஆயிரம் ரூபா அல்ல.... இருபது ஆயிரம் சம்பாதித்தேன்...இரண்டு லச்சம் சம்பாதிக்க போகிறேன்... இரண்டு கோடியும் சம்பாதிப்பேன்....
இரண்டு வாரம் முன்னாடி விருதுநகர் போனப்ப நா போய் பிரதர் கடைல அஞ்சு ரூபா குடுத்து சீவல் ஐஸ் சாப்ட்டேன். ஐஸ் டேஸ்ட்டாவே இல்ல... என்னோட பிரெண்டு சொன்னான் முந்தி மாதிரி பிரதர் சீவல் ஐஸ் போட்ரதில்லடா அப்டின்னு... ஆமா ஆமா ரோடு கட ஐசு இப்படிதான் இருக்கும்...
எனக்கு புலப்பட வில்லை அதே ஐஸ் ஏன் அன்று நன்றாக இருந்ததென்று... இன்று நான் உணர்கிறேன்... அன்று நான் அனுபவித்த சீவல் ஐஸின் சுவை ஐஸின் தரத்தால் வந்தது அல்ல... எனக்காக பாசத்தோடு போய் ஐஸ் வாங்கிக்கோடா என்று தலை சீவி விட்டு ஆச்சி குடுத்த அந்த பத்து பைசா ஏற்ப்படுத்திய சுவைதான் அது....
ஆனால் நானோ, ஆச்சி தந்த அந்த பாசத்தால் வந்த சுவையை உணராமல் ஐஸ் வாங்குவதற்காக பத்து பைசா தேடி வந்து, பல லச்சம் சம்பாதித்தும், இன்னும் அலைகிறேன் சமூகத்தின் பின்னால்... சூழ்நிலைவாதியாக... இன்று என்னுடன் இல்லை எனது சொந்தங்கள்... வெகு தூரத்தில் உள்ளேன்.... இன்னும் பல ஆயிரம் தொலை தூரம் செல்ல போகிறேன்...
இதுவும் கடந்து போகும்...
(சொந்த ஊரில் சொந்தங்களோடு சோறு தின்பவன் எவனடா ... இருந்தால் அவனே இவ்வுலகில் சொர்க்கம் கண்டவனடா....)
--
(நன்றி திரு. க. பழனி கண்ணன்)
No comments:
Post a Comment