முடியவில்லை.ஒவ்வொரு நொடிகளிலும்
வலித்தது அவள் என்னை எல்லா இடங்களிலும்
தேடி அலைந்து ஏமாந்து அழுகிறாள் என
அலைபேசியில் சேதி வந்த போது.. அப்படி
என்ன அவசரம் அவளுக்கு என்னை தேடும்
அளவிற்கு. யோசனை கொன்றது வலி நொடிகளை.
முடிவு செய்தேன், கிளம்புவதென்று.. இருக்கும்
வரை தெரியவில்லை எம் பிரிவின் வேதனை.
மனம் வலித்து வலித்து நொந்தது அவளின் தேடலால்
பிரயாணம் முடிந்து நடு இரவில் 2 மைல் நடந்து
அழைப்பு மணி அடித்தால். வந்தது அவளின் தாய்.
பின்னால் அவள், ஓடி வந்து தழுவினாள் என்னை
எந்த வித தயக்கமுமில்லாமல் ஒரு சிறு அழுகையுடன்
அப்பா. என்று கதறிக் கொண்டு.. கரைந்தேன்
அன்னொடியில் என் உயிரின் பகுதியை கண்டு..பாசத்தினால்...
அப்போது புரிந்தது ஒவ்வொரு உயிரின் ஓட்டமும் எதற்காக என்று..
No comments:
Post a Comment