Sunday, September 5, 2010

என் காதலிக்கு

உன் மெளனங்களுக்கு உள்ளே
சிக்கி நம் காதல்
வெளி வராமல்
தவிக்கிறது .
---------------------------------------------------
தவளை ஓயாமல் சத்தமிட்டு
தன்னைதானே
காட்டி கொடுப்பது போல்
உன் வெட்கமே
உன் காதலை
எனக்கு காட்டி கொடுத்து
விடுகிறது .
------------------------------------------------------
உன் காதலை
மட்டுமே
எதிர்பார்த்து
ஒற்றைகாலில்
நிற்கிறது
என் இதயம் .

-------------------------------------------------------

நீ ரோஜா பூ வை
சூடிக்கொண்டு போய்
விட்டாய் .அதை
நினைத்து கவலை பட்டு
அன்று சாயங்காலமே
செவ்வரத்தம் பூ
எல்லாம் தூக்கு
மாட்டி கொண்டன .

No comments:

Post a Comment