என் வீட்டு
நிலைக்கண்ணாடி
கற்பிணியாக
மாறி சந்தோஷ படுகிறது
உன் ஸ்டிக்கர் பொட்டை
சுமந்து கொண்டு இருக்கிறது
அதுதான் போலும்
அதனிடம் கொஞ்சம் பார்த்து நடந்துகொள்
வழமைக்கு மாறி
உன் அழகை
தெறிக்க விடாமல்
உறிஞ்சி விடும் .
என் வீட்டு ரோஜாக்கள்
உன்னை வர வேண்டாமாம் என்கின்றன
பொறாமை பிடித்தவை போலும் அவை
உன் அழகில் அவற்றின் மவுசு
மங்கி போகுமாம்
சீ இந்த நாய் குட்டியை
பார் உன்னை கண்டதும் ஓடி வந்து
உன் காலை நக்குவதை .
என் இதயமே அப்பிடிதான் உன்னை
கண்டதும்
ஓடி வந்து உன் காலடியில்
கிடந்தது பாவம்
இந்த நாய் குட்டி
என்ன செய்யும் .
விளக்கை
சுற்றி வந்து
அதில் விழுந்து
இறந்து போகும் விட்டில் பூச்சி
போல் உன் அழகில் நானும்
விழுந்து கிடக்கிறேன்....
No comments:
Post a Comment