Thursday, March 31, 2011

ஒரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!

Wednesday, March 30, 2011

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல

இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

Monday, March 28, 2011

உறங்கும் விழிகள்
ரசிக்கின்றன
கனவுக் காட்சிகளை...!

இன்றைய உலகம்

இன்றைய உலகம்...

நேசிக்கும் பறவைக்கு
உணவு தருவோம்
கூண்டுக்குள் வைத்து...

பாதை என்பது தானே வகுப்பது

பாதை என்பது தானே வகுப்பது
-------------------------------------------

'வகுத்துக் கொடுப்பார்கள்
வழி'என்று தண்ணீர்
தவித்துக் கிடந்ததா?

ஓடி ஓடியே
ஓடை தனக்கோர்
உற்சாகப் பாதையை
உருவாக்கிக் கொண்டது!

ஓடினால் ஓடை
உட்கார்ந்தால் குட்டை

எது தேங்குகிறதோ
அது ஏங்குகிறது!

Sunday, March 27, 2011

இந்தியா வல்லரசு

"2020ல், இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, அறிஞர்களும், ஆன்றோர்களும், இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறை மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்.

தாழ்த்த முடியாது!!!

தாழ்த்த முடியாது
தலைதாழ்த்தி பிடித்தாலும்
மேல்நோக்கி எரிவது தான்
நெருப்புக்கு வழக்கம்.
அது தான் எங்கள்
இனத்துக்கு இலக்கம்!

என்ன புண்ணியமோ.....???


என்ன புண்ணியமோ.....
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்!

நம்பிக்கை!!!

ஆழமான நம்பிக்கை உன் இலக்கின் மீது இருந்தால்
நீ எத்தனை தடவை மூழ்கினாலும் இலக்கின் கரையை
சேர்ந்தே தீருவாய்...
நிறம்மாறும் மனிதர்கள் இந்த மண்ணில்
நிலைத்து இருந்து விட்டால்
வீரமும் மானமும் படைத்த மனிதர்கள் வாழும்
இந்த மண்ணில் அவர்களுக்கு நிம்மதி என்றும் இல்லை
இது தான் மனித வாழ்க்கையின் கால உண்மை...............
நாம் நடக்கும் பாதையில்
மலர்கள் இருக்க வேண்டும்
என்று நினைப்பது தவறு அல்ல...
ஆனால் ஒரு முள் கூட இருக்க
கூடாது என்று நினைப்பதுதான் தவறு...

Saturday, March 26, 2011

வேண்டுவன!

வேண்டுவன!

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
...தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

- பாரதியார்

வாழ்க இலவசம்

"டாஸ்மாக்' வருமானம் இல்லாமல், இனி எந்த கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்ற நிலைக்கு, நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு வந்து விட்டுள்ளனர், நம்மை ஆள்கிறவர்கள். காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றவர்கள், போதை வருமானத்தில் ஆட்சி நடத்தவில்லை என்பதை நாடறியும். அவர்கள் வழி வந்தவர்கள், அவர்களின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, இரண்டு தலைமுறைகளை நாசம் செய்து விட்டனர். இனி ஆட்சியில் அமரப்போகும் எந்த ஒரு முதல்வரும், ஒரே ஒரு இலவசத்தை மட்டும் மக்களுக்கு கொடுத்துவிட்டால் போதும்... அது, குடியால் உயிர் இழக்கும் ஒவ்வொரு, "குடிமகனுக்கும்' அந்திம கால ஈமச்சடங்கிற்கான ஒரு தொகையும் இலவசமாக கொடுத்து விட்டால், அவர்களின் ஆத்மா சாந்தி அடையும். வாழ்க இலவசம்.

Wednesday, March 23, 2011

வாழ வழி இல்லை
ஆனால், வழி
எல்லாம் வாழை...
வருகிறார்
அரசியல்வாதி!

Tuesday, March 22, 2011

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

Monday, March 21, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

ஜெயா டிவியில் இலையாட பூவாட நிகழ்ச்சிக்கு கெமிஸ்ட்ரி புகழ் கலா மாஸ்டரும் நமீதாவும் நடுவராக கலக்கலாம்.


ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்தி நாங்கள்லாம் கலை குடும்பம் என ரஜினியும் கமலும் சோப்பு போடலாம்.கவிப் பேரரசு வைரமுத்து தைரிய லட்சுமி ,தானிய லட்சுமி என கவி பாடலாம்.


அம்மாவின் கதை வசனத்தில் சினேகன் நாயகனாக நடிக்கும் கொடுமைகள் அரங்கேறலாம்.(இலைஞன்?)


ஜெயா பிக்சர்ஸ் ,ஜெ ஜெ மூவீஸ் என்ற பெயர்களில் திரைத்துறைக்குள் கொள்ளை கும்பல்கள் படையெடுக்கலாம்..


ஏதும் விட்டுப் போச்சோ..எவ்வளவோ பாத்துட்டோம்...

Sunday, March 20, 2011

மண்ணோடு ஒரு உரையாடல்....

மண்ணோடு ஒரு உரையாடல்....

உன்னை சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை...
இந்நொடி வரை என்னை சுமந்திருக்கும் உனக்காக நான் கொண்டு வருவதோ, நான் மழலையாய் உன்னோடு உறவாடி மகிழ்ந்திருந்த நினைவுகளை மட்டுமே.....

Saturday, March 19, 2011

Nice line

"It Is Very Easy To Defeat Someone, But It Is Very Hard To Win Someone"
~ John Keats

Friday, March 18, 2011

"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent. So When Your Value Increases Keep Yourself Calm Silent"
~ Shakespeare

சரித்திரம்

சாகத் துணிந்து விட்டாயா? தகுதி வந்து விட்டது உனக்கு சரித்திரம் படைக்க!

Thursday, March 17, 2011

கவிதை

சண்டையில் தோன்றிய சந்திப்பு,
சமாதானத்தில் முடிந்த சண்டை ........

அதனால் பூத்த நட்பு

நட்பாய் நீ சொல்லிய கவிதை,

உன் கவிதையில் நான் கண்ட பாசம்

பாசமாய் நீ ஊட்டிய சோறு

அழகாய் சிரிக்கும் உன் முகம்

உன் முகம் பார்த்து கவலை மறக்கும் நான்,

நான் தவறிழிக்கையில்..

தெளிவாய் நீ கூறிய அறிவுரை
உன் அறிவுரை கேட்டு வெற்றி பெற்ற நான்,

பாசமாய் நீ கொட்டிய கொட்டு

உன் கொஞ்சல் வார்த்தை கேட்க
பாசாங்கை அழுத நான்!

இவை அனைத்தும் என்றும்

அழியா சுவடுகளாய் .......... என்றும்
பதிந்திருக்கும், என் மனதில் நீ .........
என்னை மறந்து போன பின்பும்.!

Wednesday, March 16, 2011

"Be a good person, but dont try to prove"
விழுந்தால் விதையாக விழு!
எழுந்தால் மரமாக எழு!

நம்பிக்கையற்றவன் மனித்னாகவே இருக்கமுடியாது.
செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு
லட்சியமாக இருத்தல் வேண்டும்.

உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி
கொள்வதில்லை.

நல்ல சிந்தனைகள் உள்ளவரின் மனதில் குழப்பம் இராது.
நாம் எதச் செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்க வேண்டும்.
கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்து விடும்.

தன்னைத் தெரிந்து கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் தெரிந்து வைத்துக்
கொள்வதால் ஒரு பயனும் இல்லை

Monday, March 14, 2011

சாகத் துணிந்து விட்டாயா?
தகுதி வந்து விட்டது உனக்கு
சரித்திரம் படைக்க!
பறக்கும் பட்டாம்பூச்சியை பிடித்து
சிறகை உடைக்கும் குழந்தை போல்
மனிதர் வாழ்க்கையை எடுத்து
களி நடம் புரியும் தெய்வம்...


As flies to wanton boys
are we to gods;
They kill us for their sport...

எது வலியது?

இருவீட்டாரும் இனி நம்மை பிரிக்க முடியாது என்று எண்ணித்தான் மாய்ந்தனர் காதலர்கள் அப்படியும் பிரித்தார்கள் அவனை எரித்தும் அவளை புதைத்தும் வலியது விதியல்ல ஜாதி!

பால்! பாழ்!

வாழ்க்கையை
பாலாக்கி பருகுவதும்
பாழாக்கி மருகுவதும்
நம் கையில்...

Friday, March 11, 2011

"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark,
Even Your Own Shadow Doesn’t Follow You"

~ Hitler
During the day we can stop for some moments to reflect (think)
and remember to be peaceful and silent.
This act of stopping is like putting a brake on the mind.

~ Brahma Kumaris
Apology is a lovely perfume;

it can transform the clumsiest moment

into a gracious gift

Thursday, March 10, 2011

நட்பே !
நீ கரையாத உருவம்
நான் மறையாத பருவம் !
நான் வேரானால்
நீ முளையின் நீராவாய் !

நான் மழையானால்
நீ மழையின் முகிலாவை !
நான் சுவையானால்
நீ சுவையின் உணர்வாவாய் !
நான் தாயானால்
நீ தாயின் கருவாவாய் !
நான் அன்பானால்
நீ அன்பின் உருவாவாய் !
நான் மலரானால்
நீ மலரின் மணமாவாய் !
நான் புதிரானால்
நீ புதிரின் விடையாவாய் !
நான் நட்பானால்
நீ நட்பின் உயிராவாய் !

ஓடி விளையாடும் பிள்ளையானாலும் ,
கூனிக்குறுகும் முதியவனானாலும் ,
என் நட்பே !
நீ என்றும் மறையாத இன்பம்
வாழ்வின் துயரை நீக்கும் பேரின்பம் .......
Cute Lines:
If
You
Cant Find
The Right Words
...For Certain Situations,

Just Give A Smile.
Words
May Confuse,
But
A Smile
Always
Convinces.